fbpx

உங்க PAN CARD எப்பொழுது வரை செல்லுபடியாகும்…? இந்த தவறை செய்தால் ரூ.10,000 வரை அபராதம்…!

பான் கார்டு எப்பொழுதும் இன்றியமையாத ஆவணமாக இருந்து வருகிறது, ஏனெனில் அதை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. பான் கார்டு இல்லாத நிலையில், ஒரு தனிநபர் வங்கி கணக்கைத் தொடங்க முடியாது, நிதி முதலீடு செய்வதில் தொடங்கி தற்பொழுது அனைத்திற்கும் பான் கார்டு அவசியம், ஒருவர் பான் கார்டை தொலைத்து விட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வணிகம் அல்லது தொழிலைக் மேற்கொள்ள உள்ள நபர்களுக்கு பான் கார்டு அவசியம் தேவைப்படும்.

அதேபோல் வங்கியில், குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு நபரும் பான் கார்டைப் பெற வேண்டும். இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் பான் கார்டு அவசியமான ஒன்றாகிவிட்டது.
இப்படி இருக்கையில் எத்தனை நாட்களுக்கு உங்கள் பான் கார்டு செல்லுபடியாகும் என்பதை அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

பான்

ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகுதான் அவரது பான் கார்டை ரத்து செய்ய முடியும்

பான் கார்டின் செல்லுபடியாகும் காலம் வாழ்நாள் வரை இருக்கும். ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகுதான் அவரது பான் கார்டை ரத்து செய்ய முடியும். அல்லது இறப்புச் சான்றிதழின் உதவியுடன் தேவையான அனைத்து இடங்களிலும் KYC புதுப்பிக்கப்படும். ஒருவர் இறந்த பிறகுதான் பான் கார்டு காலாவதியாகிறது. பான் கார்டு வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். பான் கார்டில் யாருடைய பான் எண் இருக்கிறதோ அந்த நபரின் தகவல் இருக்கும். சட்டப்படி ஒருவர் தன்னிடம் ஒரு பான் கார்டை மட்டுமே வைத்திருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் விதிமுறை உள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்

ஒரு நபர் ஒரு பான் எண்ணை மட்டுமே வைத்திருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணைப் பெறுவது அல்லது வைத்திருப்பது சட்டத்திற்கு எதிரானது மற்றும் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணைப் பெறாமல் இருப்பது நல்லது. ஒருவளை உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்கள் இருந்தால் பான் கார்டு மாற்றக் கோரிக்கை விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

இந்தியாவில் பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது....!

Sat Oct 15 , 2022
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக இருந்தது. இது, 2022 ஆகஸ்ட் மாதத்தில்12.41%ஆக இருந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் உணவு தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய உணவு குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 175.2 ஆக சரிந்தது. இந்த இலக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 176.0 ஆக இருந்தது. உணவு குறியீட்டின் அடிப்படையில் பணவீக்க விகிதம் ஆகஸ்ட், 2022 9.93% லிருந்து செப்டம்பர், 2022-ல் 8.08%ஆக […]

You May Like