fbpx

’’கோலியை கைது செய்’ டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் ஹாஷ் டேக்!!!

தமிழகத்தில் ரோகித் ஷர்மா ஆதரவாளர் கொலை செய்யப்பட்டதை அடுத்து டுவிட்டரில் கோலி யை கைது செய் என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

அரியலூர் மாவட்டத்தில் கிரிக்டெ் ஆர்வலர்கள் தர்மராஜ் (24)  . இவருடைய நண்பர்தான் கொல்லப்பட்ட விக்னேஷ். இருவரும் அரியலூரின் பொய்யூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். விக்னேஷ் என்பவர் மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு ஆதரவாளர். தர்மராஜ் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு ஆதரவாளர்.

கடந்த வியாழக்கிமை நடந்த இந்த சம்பவத்தில் 21 வயது தர்மராஜ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது இருவரும் மது அருந்திவிட்டு சண்டையிட்டது தெரியவந்தது. இருவரும் கிரிக்கெட்டில் யார் சிறந்தவர்கள் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் ஷர்மாவா?- விராட் கோலியா? என்ற விவாதம் கடுமைாக சூடுபிடித்துள்ளது. இதில் தகராறு முற்றியதில் மது போதையில் மற்றொரு இளைஞரை கொலை செய்துள்ளார்.

ஆர்.சி.பி. அணியையும் விராட் கோலியையும் விக்னேஷ் கிண்டல் செய்துள்ளார். தர்மராஜை பொதுவாக அவர் உடல் வாகை வைத்து கலாய்க்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆர்சிபி அணியுடன் தர்மராஜையும் சேர்த்து கலாய்த்துள்ளார்.இதனால் தர்மராஜ் விக்னேஷை் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதனிடையே படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் பலியானார்.

இதையடுத்து காலை முதலே இந்த ஹாஷ் டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. கோலியை கைது செய் என்ற ஹாஷ்டேக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/its_monk45/status/1580963457742307328?s=20&t=9HrnW506el6bj5B6kmP_Tw

Next Post

SBI கிரெடிட் கார்ட் வைத்து இருப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!!!

Sat Oct 15 , 2022
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி முதல் SBI கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கும், வீட்டு வாடகைக்கான பேமெண்ட் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது, ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இதற்கு ரூபாய் 100 அதிகரித்து 199 ரூபாய் + வரி வசூலிக்கப்பட உள்ளது. […]

You May Like