நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக திரை உலகினர் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பூ என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்தான். குஷ்புவைப் போலவே இருப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தார். சூர்யா , விஷால், சிவகார்த்திகேயன் , உதயநிதி ஸ்டாலின் , ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கின்றார். 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இந்நிலையில்இவருக்கு ஜெய்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 450 ஆண்டுகள் பழமையான இக்கோட்டை புதுப்பிக்கப்பட்டு தயாராகி வருவதாகவும் ஆடம்பரமான திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருகின்ற டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது என கூறப்பட்டு வருகின்றது. ஆனால் தேதி என்ன என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதில் விருந்தினர்களாக பங்கேற்பவர்களுக்கு ஜெய்பூர் அரண்மனைகளில் அறைகள் தயார் செய்யப்படுகின்றன.
இப்போதைக்கு தமிழில் 4 படம் , தெலுங்கில் 2 படம் என கொஞ்சம் பிசியாகத்தான்இருக்கன்றாராம் புதுப்பொண்ணு…