ஒரே நாளில் சாதனையை முறியடித்த துணிவு..,.!

தமிழ் திரை உலகில் முடி சூடா மன்னர்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜயும், அஜித்தும் இவர்களுடைய நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் அது மெகா ஹிட் திரைப்படம் தான்.

அதன் அடிப்படையில் நேற்று அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திற்கும், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கும் இடையே மிகப் பெரிய போட்டி நிலவி வருகிறது.

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் ஹஜ்.வினோத் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட துணிவு திரைப்படம் நேற்று வெளியானது.

இதற்கு முன்பு இந்த கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை என்று 2 திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. ஆனாலும் வலிமை திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும் இந்த திரைப்படத்திற்கு மக்களிடையே கலவையான விமர்சனங்களே கிடைத்தனர்.

இந்த நிலையில், எச்.வினோத், அஜித் உள்ளிட்டோர் 3வது முறையாக கூட்டணி சேர்ந்து வெளியிட்ட திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்ற வருடம் அமெரிக்காவில் வெளியான வலிமை திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் அமெரிக்காவில் தற்போது வெளியான துணிவு திரைப்படம் ஒரே நாளில் பெற்று சாதனை படைத்திருக்கிறது.

தற்சமயம் வரையில் துணிவு திரைப்படம் அமெரிக்காவில் $400K வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Next Post

ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது….!

Thu Jan 12 , 2023
தற்கால இளம் தலைமுறையினர் எதிலும் வேகமாக இருக்கிறார்கள். அதிலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே பதின் பருவ வயது முடிவடைவதற்குள்ளேயே காதல் உணர்வு தோன்றி விடுகிறது. அந்த உணர்வு முழுமையான காதல் தானா? அல்லது வெறும் ஈர்ப்பா? என்ற விவரம் புரிவதற்கு முன்னரே, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கி கொள்கிறார்கள். அந்த வகையில், கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு […]

You May Like