இளைஞரை 6 கி.மீ வரை.. பைக்கில் தரதரவென கயிறு கட்டி இழுத்துச்சென்ற கொடூரம்.! பகீர் காரணம்.!

கொடுத்த கடனை திருப்பி கொடுக்காத காரணத்தால் ஒரு இளைஞரை கயிறில் கட்டி பைக்கில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது.


ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் பகுதியில் நேற்று ஒரு இளைஞரின் கைகளில் கயிறு கட்டி அதை மோட்டார் வாகனம் மூலம் ஆறு கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றுள்ளனர். நேற்று மாலை நேரத்தில் நடந்த இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்த எந்த பொது மக்களுமே தடுத்து நிறுத்தவில்லை.

ஆனால், அதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி லைட்ஸ்களை குவித்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு அநியாயம் நடக்கும் பொழுது அதை தடுக்காமல் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று நெட்டிசன்கள் பலரும் திட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து கட்டாக்கின் சுதாஹட் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்..!! விஜய் டிவி தொகுப்பாளருக்கும் தொடர்பு..!! பரபரப்பை கிளப்பிய ஹேமந்த்..!!

Tue Oct 18 , 2022
வி.ஜே.சித்ராவின் மரண வழக்கில் தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கும் தொடர்பு இருப்பதாக கணவர் ஹேமந்த் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் […]
சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்..!! விஜய் டிவி தொகுப்பாளருக்கும் தொடர்பு..!! பரபரப்பை கிளப்பிய ஹேமந்த்..!!

You May Like