மயிலாடுதுறையில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவரிடம் என்ன சாதி என கேட்டு தொழிலாளி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் செம்பனார் கோவில் அருகே வல்லம் என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கின்றார் 14 வயது சிறுவனான இவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் நீ எந்த ஊரு தம்பி ? என கேட்டுள்ளார். ஊரின் பெயரை கேட்டது ஜாதி என்ன? என கேட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட பிரிவு என தெரிந்ததும் அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த சிறுவனை மீட்டு பேருந்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாணவரை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தாக்கிய நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் , மாணவனை தாக்கிய கீழ நாஞ்சில் நாடு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.