காசியாபாத்தில் உட்கார்ந்திருந்த இருக்கையிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஜிம்மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத் ஷாலிமார் கார்டன் பகுதியில் தனது சொந்த ஜிம் ஒன்றில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் அடில் .. 33 வயதே ஆன இளம் பருவ ஜிம்மாஸ்டரான இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஜிம்முக்கு சென்ற அவர் வழக்கமான பணிகளை பார்த்துள்ளார். பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையுடன் கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் அவரது குடும்பத்தினரும் அவர் ஓய்வின்றி ஜிம்மில் பயிற்றுவித்துவந்ததாக கூறினர்.
ஜிம் மாஸ்டரான அடிலுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்துள்ளார். அவரது அலுவலகத்தில் அன்றாட பணியை கவனித்துக் கொண்டிருந்தபோதே துயரமான சம்பவம் நடந்துள்ளதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் 35 வயது மிக்க நபர் நவராத்ரி விழாவில் நிகழ்ச்சியின்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரில் தெருக்கூத்து நிகழ்ச்சியில் கலைஞர் யோகேஷ் குப்தா இதே போல ஆடிக்கொண்டிருந்தபோதே மரணமடைந்தார். நடனத்தின் ஒரு பகுதி என்று பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே நிகழ்ந்தது இந்த சம்பவம் .