fbpx

ஆசிரியர்களுக்கு அருமையான நியூஸ் : வயது உச்சவரம்பு உயர்வு .. எத்தனை ஆண்டுகள் தெரியுமா ?

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்தில் ஆசிரியர்களுக்கான வயது உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக தீபாவளிக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத்தில் பொதுப்பிரிவினரின் வயது உச்ச வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும், ஓய்வு பெறும் வயது 58 ஆகவும் இருந்தது. இதை அடுத்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் பணி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 40 ஆக குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல் முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டு இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40 எனவும் இடஓதுக்கீடு பிரிவினருக்கு 45 எனவும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. முதலமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டு இருந்தார்.

மனித வள மேலாண்மைத்துறை நேரடி நியமன உச்சவரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும் இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது என அரசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

நரபலிக்கு முன்பே ஒரு கொலை..!! இறைச்சியை ரூ.20 லட்சத்திற்கு விற்றது அம்பலம்..!! திடுக்கிடும் வாக்குமூலம்..!!

Thu Oct 20 , 2022
கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதான பெண் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒரு கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர், இந்த வழக்கில் முகமது ஷாபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் அவர்களிடம் நடத்தும் விசாரணையில் […]
நரபலிக்கு முன்பே ஒரு கொலை..!! இறைச்சியை ரூ.20 லட்சத்திற்கு விற்றது அம்பலம்..!! திடுக்கிடும் வாக்குமூலம்..!!

You May Like