கீரை வகைகள் நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளி தரும் .ஒவ்வொரு கீரையிலும் ஓவ்வொரு சத்துக்கள் அடங்கியுள்ளது .அதனால் உடல் ஆரோக்கியமாய் இருக்க நினைப்பவர்கள் தினமும் ஏதாவது ஒரு கீரையினை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .
சிலருக்கு கர்ப்பமாவது தள்ளி போய் கொண்டேயிருக்கும் .அப்படி உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் கருப்பை பலம் பெற்று உடனடியாக கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்
அதே போல் சில ஆண்கள் பலருக்கு அவர்களின் உயிரணுக்கள் வலிமையின்றி இருக்கும் .இதனால் குழந்தை பிறக்காத நிலை ஏற்பட்டு மனம் வருந்துவர் .அப்படிப்பட்ட ஆண்கள் மணத்தக்காளி கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருந்து சீக்கிரமே அப்பாவாக வாய்ப்புள்ளது .மேலும் காச நோய் ,உடல் வெப்பம் ,வயிற்றுப்புண் ,தொண்டை கட்டு போன்ற நோய்களும் இந்த கீரை மூலம் குணப்படுத்தலாம் .
சிலருக்கு மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் .அவர்களும் இந்த கீரையை சாப்பிடலாம்
சிலருக்கு கிட்னியில் கல் தோன்றி தொல்லை கொடுக்கும் .அப்படி பட்டவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை பெருக்கி, உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
* மாதவிடாய் வரும் சமயம், அதிக வயிற்று வலி உள்ள பெண்கள், சோற்றுக் கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிய வெங்காயத்தை 50 கிராம் அளவுக்காவது உணவில் சேர்ப்பது, பிசிஓடி பிரச்னையைப் போக்க உதவும்.
* கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கு கணிசமானது. சரியான அளவுக்கு தைராய்டு சுரப்பு இல்லையென்றாலும், கருத்தரிப்பு தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு, `அகர் அகர்’ எனப்படும் வெண்ணிறக் கடல் பாசி ஆகியவற்றைச் சேர்ப்பது, தைராய்டு பிரச்னையைச் சீராக்க உதவும். கடுகு, முட்டைக்கோஸை அதிக அளவில் எடுத்துக்கொள்வதும் தைராய்டு சீராக உதவும்.
* குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்கிறது ஒரு சித்த மருத்துவப் பாடல். இந்தக் கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும்.
* ஆண்களுக்கு விந்து அணுக்கள் குறைவு, விந்து அணுக்களின் இயக்கம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதப்படுகிறதா? உணவில் அதிகமாக முளை கட்டிய பயறு வகைகளையும், லவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களையும் சேர்க்க வேண்டும். தினமும் முருங்கைக்கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப் பருப்பு ஆகியவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும். முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஏதாவதொன்றை தினமும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.
* மாமிச உணவைவிட, மரக்கறி உணவே (காய்கறி, பழங்கள்) விந்து அணுக்களை அதிகரிக்கவும் அதன் இயக்கத்தைக் கூட்டவும் உதவும்.
* முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட, எண்ணெய்ச் சத்து அதிகம் இல்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* குழந்தைப் பேறு பல நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், கொத்துமல்லிக் கீரையை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.