பெற்றோர்களே கவனம்…! குடற்புழு நீங்க அரசு வழங்கும் இலவச மாத்திரை…! யார் யார் இதை பெறலாம்…?

தருமபுரி மாவட்டத்தில்‌ இன்று தேசிய குடற்புழு நீக்க நாள்‌ தேசிய அளவில்‌ கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல்‌ 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌ அங்கன்வாடி மையங்கள்‌, அரசு பள்ளிகள்‌, அரசு உதவிப்பெறும்‌ பள்ளிகள்‌, தனியார்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌, பாலிடெக்னிக்‌ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும்‌ குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்‌) வழங்கப்படும்‌.

காலை உணவு திட்டத்தின் குறிக்கோள்..! பள்ளிகளின் விவரம்..! தமிழக அரசு முக்கிய உத்தரவு..!

தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்‌ 21-02-2023 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும்‌. அன்றைய தினத்தில்‌ விடுபட்ட அனைத்து சூழந்தைகளுக்கும்‌ குடற்புழு நீக்க மாத்திரை தவறாமல்‌ வழங்கப்படும்‌.இப்பணிகளுக்கு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வு துறையினருடன்‌ பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ வளர்ச்சிப்பணிகள்‌ திட்டம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ உள்ளாட்‌சி துறை, உயர்‌ கல்வி துறை மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்‌ துறை சார்ந்த பணியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ ஒருங்கிணைந்து பணிபுரிகின்றனர்‌.

தருமபுரி மாவட்டத்தில்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ 5.15 இலட்சம்‌ சூழந்தைகளுக்கும்‌ மற்றும்‌ 20-வயது முதல்‌ 30-வயது வரை உள்ள 1.22 இலட்சம்‌ பெண்களுக்கும்‌ குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்‌.

Vignesh

Next Post

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நூலகர் பணிகளுக்கான 35 காலியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு!

Tue Feb 14 , 2023
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நூலகப் பிரிவில் காலியாக உள்ள 35 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நூலகப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2023. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக கல்லூரி நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர், நூலக உதவியாளர், நூலகர் மற்றும் தகவல் […]

You May Like