fbpx

மக்களே உஷார்…! இந்த 18 மாவட்டத்தில் இன்று மட்டும் கனமழை…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 29-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடிமின்னலுடன் கூடிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

Vignesh

Next Post

காதலித்து ஏமாற்றிய பெண்..!! 11 பேரை சரமாரியாக வெட்டிய காதலன்..!! அதிரும் ஆந்திரா..!!

Wed Oct 26 , 2022
காதலித்து வந்த பெண் திடீரென திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன் அந்தப் பெண் உட்பட 11 பேரை சரமாரியாக தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ஃபிரங்கிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் பந்துலு தெருவைச் சார்ந்த மணிகண்டன் (23) என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திடீரென […]

You May Like