விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவு முழுவதும் மழை நீடித்த […]

இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, […]

கடந்த டிசம்பர் மாதம் கன மழை மற்றும் புயலால் தமிழகம் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்தது. டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடும் மழை பாதிப்பிற்குள்ளானது. வரலாறு காணாத கனமழை பொழிவால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிதி உதவிகள் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். சென்னையைத் […]

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களை கனமழை மற்றும் புயல் தாக்கியது. இதில் பெரும் அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது வரை நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வருகின்ற ஜனவரி ஐந்தாம் தேதி வரையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு […]

தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது செய்தி குறிப்பில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2023 காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, இதர அணைகளில் நீர்வரத்து அதிகமாகி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து […]

கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களிலும் இன்று காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. […]

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலை பகுதியில் உள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. […]

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது . இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், […]

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், […]

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த 3 […]