fbpx

ஒரே மாதத்தில் 2 முறை அடக்கம்..!! இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் முட்புதரில் கிடந்ததால் பரபரப்பு..!!

ஈரோடு அருகே இறந்துபோன முதியவரின் உடலை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பாசூர் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள முட்புதரில் முதியவரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதியவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த உதயகுமாரின் தந்தை துரைசாமி என்பது தெரியவந்தது. 70 வயதான துரைசாமி கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் 2 முறை அடக்கம்..!! இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் முட்புதரில் கிடந்ததால் பரபரப்பு..!!

இந்நிலையில், கடந்த மாதம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இடுகாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு, துரைசாமியின் உடல் முட்புதரில் சிக்கியிருந்தது. இதனையடுத்து, துரைசாமியின் உடலை அவரது மகன் உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அதே பகுதியில் துரைசாமியின் உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த மாதம் உயிரிழந்த முதியவரின் உடல் இரண்டாவது முறையாக அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஆசையாக மது வாங்கி, அருந்த சென்ற குடிமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Wed Oct 26 , 2022
மது பாட்டிலுக்குள் செத்த தவளை மிதந்த நிலையில் இருந்தது அதிர்ச்சியடைய செய்துள்ளது. சத்தீஸ்கர் மாவட்டத்தில், ஆசையாசையாய் மதுகுடிக்க குவிந்த குடிமகன்களில் ஒருவர் வாங்கி இருந்த மதுபாட்டிலுக்குள் தவளை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து சக ‘குடி’மகன்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். பிற மாநிலங்களைப் போலவே சத்தீஸ்கர் மாநிலமும் மது விற்பனையில் களை கட்டியதால் தள்ளாடிக் கொண்டிருந்தது. அம்மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டம், ஹார்டி பகுதி பஜார் தெருவில் இயங்கி வந்த […]

You May Like