வானிலை எச்சரிக்கையை வாபஸ்பெற்றதை அடுத்து 5 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கடந்த 20ம் தேதி இந்திய வானிலை அறிக்கை வெளியிட்டதன் பேரில் நாகப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்து, டோக்கன் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் புயல் கரையை கடந்ததை அடுத்து இன்று முதல் விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை டோக்கன் வழங்கியதை தொடர்ந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று மீன்பிடி தொழிலுக்குச் சென்றனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் மீன்பிடிக்க செல்வதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.