கழக உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்த டி.டி.வி தினகரன்! முக்கிய அறிவிப்பு!

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்துள்ள இடத்தில், வரும் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார்.


இதுபற்றி அமமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விடுதலைப் போராட்ட வீரரும், மக்களின் அன்பைப் பெற்று சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை அலங்கரித்தவரும், தென்னாட்டு போஸ் என்று இந்திய அளவில் புகழ் பெற்றவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரண்டு கண்களாகப் போற்றிய மாபெரும் தலைவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி தெய்வீக திருமகனின் நினைவாலயம் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று அன்றைய தினம் காலை 10 மணி அளவில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வட்ட/வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

இரவு ரோந்து பணி..!! காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை..!! சிறப்பு படி வழங்கி அரசாணை..!!

Thu Oct 27 , 2022
தமிழக காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அவரவர் காவல் எல்லையில் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர சிறப்பு பாதுகாப்பு பணி, நுண்ணறிவு பணி, குற்றப்பிரிவு, புலன் விசாரணை, காவல் கட்டுப்பாட்டு பணி மற்றும் தொழில்நுட்ப பணிகளை காவலர்கள் […]
Police Night Duty

You May Like