சமூக வலைத்தலங்களில் ஆபாசபடத்தை கன்னிகாஸ்திரிகளும் பாதிரியார்களும் பார்க்கின்றார்கள்.. தூய்மையான இதயத்தில்தான் ஜீஸஸ் குடியிருப்பார். இல்லை என்றால் பிசாசுதான் குடியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்…
இத்தாலியில் ரோம் நகரத்தில் போப் ஆண்டவர் ஒரு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில் ’கன்னிகாஸ்திரிகள், பாதிரியார்கள் சட்டவிரோதமான உள்ளடக்கத்தை பார்க்கின்றார்கள். தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் சமூக ஊடக உலகிலும் மூழ்கிக் கிடக்கின்றர். என்று கூறினார்.
ஆன்லைனில் ஆபாசங்களின் அபாயம் பற்றிஅவர் பேசினார். இந்த கருத்தரங்கில் கன்னிகாஸ்திரிகள் , பாதிரியார்கள்தனிப்பட்ட குறைகளை எதிர்கொண்டு ஒழுக்கத்துடன் வாழ முயற்சிக்க வேண்டும் என கூறினார். டிஜிட்டல் போர்னோகிராபி பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் உங்கள் அனைவருக்கும் இன்டெர்னெட்டில் போர்ன் வீடியோக்களை பார்க்கும் போது அது உங்களை தூண்டும் . தனி ஒருவனாகவும், கன்னிகாஸ்திரிகள், பாதிரியார்கள் சாதாரண பெண்கள் யாராயினும் இது தோன்றும் தீய எண்ணம் எனவும் குறிப்பிட்டார்.