தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் கலைபுலி எஸ்.தாணு சமீபத்தில் இவரது தயாரிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். இவர் சினிமா மட்டுமல்லாமல் பலருக்கு உதவிகளை செய்து வருவது வழக்கம். அந்த வகையில், சென்னை காவேரி மருத்துவமனையில் 33 வயதுடைய பெண் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், அவருக்கு நிதி உதவி செய்துள்ளார் தாணு. அந்த பெண் இரு வருடங்களாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். அந்த பெண்ணின் சிகிச்சைக்காக தாணு 5 லட்சம் கொடுத்துள்ளார்.
இதற்கான காசோலை படிவத்தை தாணு காவேரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் மனநல மருத்துவரான யாமினி கண்ணப்பன் இருவரிடமும் கொடுத்துள்ளார்.