பிக்பாஸ் வீட்டில் காதல் இருக்கும், சண்டை இருக்கும், அழுகை இருக்கும். ஆனால், இப்போது ஆவி இருப்பதாக திகிலை கிளப்பி உள்ளார் அமுதவாணன்.
தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் முன்னணியில் உள்ள விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், டிவி மற்றும் இணையத்தில் பிரபலமாக உள்ள நபர்கள் போட்டியாளர்களாக பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் சிறையில் இருக்கும் அசீம் மற்றும் ஷிவினுடன் ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், மைனா, அமுதவாணன் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, அமுதவாணன் ஒரு திகில் கதையை சொல்லிக்கொண்டிருந்தார். இந்த கதையை கேட்பதற்கு உண்மையில் மிகவும் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும், அனைவரும் தைரியமாக கேட்டுக்கொண்டே இருந்தனர்.
அப்போது மணிகண்டன் ரெஸ்ட் ரூம் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். உடனே மைனாவும், மணிகண்டன் பின்னால் சென்று அவரை பயமுறுத்த போகிறேன் என கூறிவிட்டு சென்றதால், ரெஸ்ட் ரூமில் நடக்கும் காமெடியை பார்க்க அமுது, ஜனனி, ஷிவின் அனைவரும் வந்தனர். ஆனால், பாத்ரூமுக்குள் வந்ததும் அமுதுவாணன் மயங்கி விழுந்து விட்டார். இதனால், அருகில் இருந்த ஜனனியும் தனலட்சுமியும் பயந்து ஓடினார்கள். இதையடுத்து, மணிகண்டன் துடைப்பத்தை எடுத்து அமுதவாணை அடித்து எழுப்பினார். இதையடுத்து, அருகில் இருந்த ஷிவினை அவர் கண்டபடி அடித்தார். அமுது விளையாடியது போதும், பிராங்க் பண்ணது போதும் என்று எவ்வளவோ சொல்லியும் அமுதவாணன் தொடர்ந்து உடம்பிற்குள் ஆவி புகுந்தது போல ஏதோ ஒருமாதிரி இருந்தார்.
அமுதவாணனின் செயலைப் பார்த்து பயந்துப்போன தனலட்சுமி, அய்யோ.. என்ன விடுங்க, நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கதறி அழுதுக்கொண்டு ஓடி மெயின் டோர் அருகே சென்று கதறி கதறி அழுதார். உடனே வீட்டில் இருந்த அனைவரும் அவரை சமாதானப்படுத்தினர். அமுதவாணன் சும்மா விளையாடுகிறார் பேய் எல்லாம் இல்லை என்று கூறினார். அப்போது மைனா வந்து, அமுதவாணன் தயவு செய்து நிறுத்துங்கள் எல்லாம் பயப்படுகிறார்கள் என்றார். ஆனால், அமுதவாணன் தொடர்ந்து ஏதோ பேசிக்கொண்டே இருந்தார். அப்போது, மணிகண்டன், அமுதவாணனுக்கு ஏற்கனவே பேய் பிடித்திருக்கிறது என்று கூறியிருப்பதாகவும். இந்த வீட்டிற்கு வந்ததும் மெத்தையில் படுத்த போது ஏதோ ஒரு மாதிரி இருந்ததாக கூறியதை கேட்டு அனைவருமே ஒரு நொடி ஆடிப்போய்விட்டார்கள். இது அனைவரையுமே அச்சமடைய செய்துள்ளது.