fbpx

NLC நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் விசாரணை அதிகாரிக்கான பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியை பற்றிய முக்கிய விவரங்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

NLC நிறுவன வேலைவாய்ப்பு: மத்திய அரசின் கீழ் இயங்கும் NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது விசாரணை அதிகாரி பணிக்கு என்று பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விசாரணை அதிகாரி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 1.7.2022ம் தேதியின் படி 70 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணிக்கான உடல் மற்றும் மன ஆரோக்கியம் நிறைந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குற்றமற்ற நேர்மை மற்றும் சுத்தமான சேவைப் பதிவுகளை வைத்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள எந்த விசாரணையிலும் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியாக இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பணிக்கு என்று தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை என்றும், நேர்காணல் மூலமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தபால் மூலம் மேலாளர் , ஒழுங்கு நடவடிக்கை பிரிவு , HR துறை, கார்ப்பரேட் அலுவலகம், NLC இந்தியா லிமிடெட், பிளாக்-எல், கடலூர் மாவட்டம், நெய்வேலி-607801 என்ற முகவரிக்கு விரைவு தபால் மூலம் அல்லது  thiaoaraiu.c@nlcindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளைக்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

Next Post

நடிகர் சித்தார்த்தே கூறிவிட்டார் : இவர் அந்த நடிகையைத்தான் காதலிக்கின்றாராம்…

Sun Oct 30 , 2022
நடிகர் சித்தார்த் மணிரத்தினம் இயக்கிய பிரபல திரைப்படத்தில் முக்கிய கதாநாயகியை காதலிப்பதாக அவரே  தகவல்கள் வெளியிட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சித்தார்த், ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் அவர் நடித்த அவர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சித்தார்த் […]

You May Like