fbpx

பாலம் பராமரிப்பு பணி நிறைவடைந்த நான்கே நாட்களில் நடந்த சோகம்… பாலம் இடிந்ததற்கு இளைஞர்கள் காரணமா?

குஜராத் தொங்கும் பாலம் சுமார் 7 மாதங்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டு நான்கே நாளில் இப்படி ஒரு சோகம் அரங்கேறி உள்ளது.

குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மோர்பி பகுதியில் ஆற்றை கடக்க வசதியாக அமைக்கப்பட்டது தொங்கும் பாலம். 1879ம் ஆண்டு கட்டப்பட்டது 230 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டது. கடந்த 7 மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது.

ஒரேவா (Oreva) என்ற தனியார் நிறுவனம் தான் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. கடந்த அக்டோபர் 26ம் தேதி பணிகள் நிறைவு பெற்றதும் திறக்கப்பட்டது. ஆனால், முனிசிபாலிட்டி இதனை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவில்லை. இன்னும் சில பணிகள் முடிக்க வேண்டி இருந்ததால் சான்றிதழ் வழங்கவில்லை.

இந்நிலையில்தான் நேற்று ஒரே நேரத்தில் சுமார் 500 பேர் அந்த பாலத்தில் சென்றனர். பாலத்தின் பாதி தூரம் சென்றதும் அங்கு சென்று கொண்டிருந்த சில இளைஞர்கள் வேண்டுமென்றே பாலத்தை வேகமாக ஆட்டியுள்ளனர். பாலத்தின் மீது குதித்தும் , இழுத்தும் வேண்டுமென்றே அபாயகரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதை அகமதாபாத்தைச் சேர்ந்த கோஸ்வாமி என்பவர் நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் , ’’ தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் நாங்கள் குடும்பத்துடன் சென்றோம். பாலத்தில் நூற்றுக்கணக்கானோர் சென்று கொண்டிருந்தனர். நாங்கள் பாலத்தின் பாதி வரை சென்ற போது அங்கிருந்த இளைஞர்கள் வேண்டுமென்றே பாலத்தை ஆட்டினர். இது ஆபத்தை விளைவிக்கும் என நாங்கள் பயந்து போய் பின்வாங்கி மீண்டும் திரும்பிவிட்டோம். அங்கிருந்த பணியாளர்களிடம் நாங்கள் இதை புகார் தெரிவித்தோம் ஆனால் , அவர்கள் டிக்கெட் கொடுப்பதில்தான் கவனமாக இருந்தார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தனர். நாங்கள் திரும்பிய சில மணி நேரங்களில் பாலம் இடிந்து விழுந்துள்ளது.

இதனிடையே இளைஞர்கள் பாலத்தில் குதிப்பதும் , இழுப்பதும் , மிதிப்பது போன்ற வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த வீடியோவுக்கும் விபத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ளனர். 77 பேர் பத்திரமாக மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தாங்களாகவே நீந்தி கரை சேர்ந்துள்ளனர். அரசிடம் முறையான அனுமதி பெறாமல் பாலம் திறக்கப்பட்டதால் விபத்து நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் ஒரு புறம் உள்ளது.  

Next Post

கன்னட ராஜ்யோத்சவா: பகத்சிங்கை தூக்கில் போடும் காட்சி… ஒத்திகை பார்த்த பள்ளி மாணவன் பலி!!

Mon Oct 31 , 2022
கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ள ராஜ்யோத்சவாவிற்கு கலை நிகழ்ச்சிக்காக பகத்சிங் தூக்கிலிடப்படும் காட்சி ஒத்திகை பார்த்தபோது மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் சஞ்சய் கவுடா . நாளை நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சிக்காக மாணவன் பகத் சிங் வேடத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். நேற்று இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகத்தில் நடிக்க தீவிரமாக ஒத்திகை […]

You May Like