மறைந்த கன்னடம், தெலுங்கு, தமிழ் நடிகர் கல்யாண் குமாரின் மகன் பரத் கல்யாண் சினிமாவில் நடிகராக அறிமுகமானாலும், அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிகராக மிகவும் பிரபலமானார். தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபூர்வ ராகங்கள், வம்சம் மற்றும் ‘ஜமிலா’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.
பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி வயது 43, சில வாரங்களாக கோமா நிலையில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். சில மாதங்களுக்கு முன்பு அவர் பேலியோ டயட்டை முயற்சித்ததாகவும், உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக அதிகரித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரியதர்ஷினி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோமா நிலைக்குச் சென்ற அவர் சுயநினைவு திரும்பவில்லை. இதனால் நேற்று காலமானார். இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும். இவருக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர்.