திருமணத்திற்கு பிறகும் காதல் தொடர்ந்ததால் காதலனை வீட்டுக்குஅழைத்த நிலையில் காதலனே கொலை செய்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இளம் ஜோடி கார்த்தி-பிருந்தா. கர்ப்பிணியான பிருந்தா கடந்த 28-ம் தேதி வீட்டில் பிணமாக இருந்தார். அடுத்த நாள் வீட்டுக்கு வந்து பார்த்த கார்த்திக்கிற்கு அதிர்ச்சியானது. இது பற்றி காவல்நிலையத்திற்குகார்த்தி தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணை நடத்தியதில் பிருந்தா, திருமணத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அதில் ஒருவரான கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் அரவிந்த் என்ற மற்றொரு காதலனுடன் காதலை தொடர்ந்திருக்கின்றார். அதுமட்டுமின்றி பிருந்தா தொடர்ந்து மற்றொரு காதலனை சந்தித்து பேசி வந்தது தெரியவந்து. கார்த்தி வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அரவிந்த்தை வீட்டுக்கு அழைத்துள்ளார் பிருந்தா.
தன்னை திருமணம் செய்யும்படி பிருந்தாவுடன் அரவிந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பிருந்தா இதற்கு சம்மதிக்கவில்லை. ஆத்திரமடைந்த அரவிந்த் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது. இதையடுத்து அரவிந்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இறந்த பெண் கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.