fbpx

தொடரும் கனமழை..!! கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!! சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை..!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிப்பு பகுதிக்கு சென்று பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை கும்பக்கரை அருவிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் கனமழை..!! கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!! சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை..!!

கடந்த ஒரு சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யாமல் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராக இருந்து வந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலைப்பகுதியில் திடீரென பெய்த கனமழையால் தற்போது கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்’..? ’படிப்பை பாதியில் கைவிடும் நிலை’..!! சுப்ரீம் கோர்டில் பரபரப்பு மனு..!!

Thu Nov 3 , 2022
பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்வதுடன் இலவச சானிடரி நாப்கின்களை வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் தேவையானோருக்கு இலவச சானிடரி நாப்கின்கள் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெயா தாக்கூர் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் சானிடரி […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like