fbpx

’வாரிசு’ படத்தின் சூப்பர் அப்டேட்..!! ’இன்று மாலை தரமான சம்பவம் காத்திருக்கு’..!! படக்குழு முக்கிய அறிவிப்பு..!!

நடிகர் விஜய்யின் ’வாரிசு’ படத்தின் முதல் சிங்கில் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இன்று காலை 10.45 மணிக்கு வாரிசு படத்தின் அப்டேட் இருக்கும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

’வாரிசு’ படத்தின் சூப்பர் அப்டேட்..!! ’இன்று மாலை தரமான சம்பவம் காத்திருக்கு’..!! படக்குழு முக்கிய அறிவிப்பு..!!

அதன்படி, வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், படத்தின் முதல் சிங்கில் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியாகும் வாரிசு படத்தின் முதல் சிங்கில் ப்ரோமோ எப்படி உள்ளது என்பதை 6.30 மணிக்கு பார்த்து தெரிந்து கொள்வோம்…

Chella

Next Post

வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை..!!

Thu Nov 3 , 2022
குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 20ஆம் தேதி வெளியிட்டது. அதில், வரும் 28ஆம் தேதியில் இருந்துதான் புதிய அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அதுபோலவே, குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.10,000 அபராதம் […]

You May Like