பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்..!! ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.12 உயர்வு..!! – ஆவின் நிறுவனம்

தமிழகத்தில் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. 


அதன்படி, அரைலிட்டர் அளவில் விற்கப்படும் நிறைகொழுப்பு கொண்ட ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ 24-இல் இருந்து 30ஆக உயரும் என்றும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலை ரூ.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை ஏற்றியதால் அதனை ஈடுகட்ட இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்..!! ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.12 உயர்வு..!! - ஆவின் நிறுவனம்

இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து, 05.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32இல் இருந்து ரூ.35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41இல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk. நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும்.

பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்..!! ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.12 உயர்வு..!! - ஆவின் நிறுவனம்

தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்..!! ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.12 உயர்வு..!! - ஆவின் நிறுவனம்

இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் (அட்டை) தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 24 குறைவு, சில்லறை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ.10 குறைவு. உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CHELLA

Next Post

12 வயது மகளை மிரட்டி செக்ஸ் உறவு..!! நேரில் பார்த்தவர்களுக்கும் விருந்தளித்த கொடூர தந்தை..!! அதிர்ச்சி..!!

Fri Nov 4 , 2022
12 வயது மகளை பெற்ற தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது நண்பர்களையும் செக்ஸ் உறவிற்கு அனுமதித்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் […]
rape22 1599414246

You May Like