fbpx

உயிரோடு இருக்கும் பெண்ணை.. ஆன்லைன் மூலம் கொன்ற இளைஞர்.! வினோத செயலால் அதிர்ச்சி.!

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் தேங்காய்பட்டணம் அருகே உள்ள புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ ஜோவின். இவரது மனைவி தன்ஷா. இவருக்கும் பெரியவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த உறவினர் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், தன்ஷாவின் உறவுக்காரரான பெரியவிளை பகுதி இளைஞர் நாதன் ஜோசப் என்ற கடந்த மாதம் 26-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தன்ஷாவின் புகைப்படத்தை பதிவேற்றி அவர் இறந்து விட்டதாக கூறி ஆர்.ஐ.பி (RIP)என்று ஆங்கிலத்தில் பதிவேற்றி இணையதளத்திலும் நண்பர்களிடமும் அதை பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றி இறந்து விட்டதாக கூறி வதந்தி பரப்பி வந்ததை தொடர்ந்து அந்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

காரில் சாய்ந்தது குத்தமா.? சிறுவனை எட்டி உதைத்த கொடூரன்.! வீடீயோ வைரல்.!

Sat Nov 5 , 2022
கேரள மாநிலத்தில் உள்ள தலைச்சேரி பகுதியில் இஷாத் என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தில் குடும்பத்துடன் கடைவீதிக்கு சென்றபோது ஓரமாக தன்னுடைய காரை நிறுத்தியுள்ளார். கடைக்கு சென்று அவர் திரும்பி வந்தபோது அவரது காரில் ஒரு சிறுவன் சாய்ந்து கொண்டு நின்று இருந்தான். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர் மோசமான செயலில் இறங்கியுள்ளார். அதாவது, இஷாத் அந்த சிறுவனின் இடுப்பு மீது எட்டி காலால் […]

You May Like