கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி துயரம் வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்”.
மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்கப்படும்”