fbpx

அடேங்கப்பா..!! ’PS-1’ படத்தால் கோடிகளில் புரளும் மணிரத்னம்..!! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா..?

’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

இயக்குனர் மணிரத்தினம், தமிழ் சினிமா உலகில் பல உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டு இருக்கிறார். இருப்பினும் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதை படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. இதற்காக பல தடவை முயற்சித்து தோல்வியை சந்தித்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். கடைசியாக லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடனும் கைகோர்த்து பொன்னியின் செல்வன் நாவலை ரூ.500 கோடி பட்ஜெட்டில் படமாக எடுத்தார்.

அடேங்கப்பா..!! ’PS-1’ படத்தால் கோடிகளில் புரளும் மணிரத்னம்..!! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா..?

முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையில் ரிலீஸானது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயராம், கிஷோர், பார்த்திபன் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து ஓடியதால், வசூலையும் வாரிக் குவித்தது. இதுவரை மட்டுமே ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.429. 75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடேங்கப்பா..!! ’PS-1’ படத்தால் கோடிகளில் புரளும் மணிரத்னம்..!! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா..?

இதனால் படக்குழு மிகப்பெரிய ஒரு லாபத்தை பார்த்து இருக்கின்றனர். இப்படி இருக்கையில், இயக்குனர் மணிரத்தினம், பொன்னியின் செல்வன் படத்தை எடுத்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு ரூ.60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தின் மூலம் மணிரத்தினத்திற்கு கிடைத்த மொத்த தொகை ரூ.120 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Chella

Next Post

பிலிப்பைன்ஸ் கடலில் தத்தளித்த 306 இலங்கை அகதிகள்… சிங்கப்பூர் கடற்படை மீட்டது…

Tue Nov 8 , 2022
இலங்கையில் இருந்து தப்பித்து சென்றபோது பிலிப்பைன்ஸ் கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 306 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இலங்கையைச் சேர்ந்த 306 பேர் கப்பலில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் –வியட்நாம் இடையே நள்ளிரவு கப்பலின் அடிப்பகுதி சேதமடைந்து அபாய கட்டத்தில் இருந்துள்ளது. இதையடுத்து அதில் […]

You May Like