fbpx

அதிர்ச்சி…! பிரபல நடிகர் பிரசாத் உடல் நலக்குறைவால் காலமானார்…! சோகத்தில் திரையுலகினர்…!

பிரபல கன்னட நடிகர் லோஹிதஸ்வ பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரபல கன்னட நடிகர் லோஹிதஸ்வ பிரசாத் காலமானார். இவர் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் பல சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவருக்கு தெலுங்கு ரசிகர்களுக்கும் அதிகம் உண்டு.

பாலகிருஷ்ணா – போயபதி கூட்டணியில் உருவாகும் ஹாட்ரிக் படமான ‘அகண்டா’வில் சின்ன பாலையாவை கைது செய்யும் ‘என்ஐஏ’ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் நடித்த சாஹோ, என்டிஆர் நடித்த ஜெய் லவ குசா மற்றும் அரவிந்த சமேதா படங்களிலும் நடித்துள்ளார். லோஹிதாஸ்வ பிரசாத்தின் மரணம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

Vignesh

Next Post

முக்கிய அறிவிப்பு...! செய்முறைத் தேர்விற்கு 25-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Thu Nov 10 , 2022
10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுவராமவர்மா வெளியிட்ட செய்தி குறிப்பில்; ‘2022-23ஆம் கல்வியாண்டில் 2023 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களும், ஏற்கெனவே 2012-ம் ஆண்டிற்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம். அனைத்து […]

You May Like