fbpx

17 வயது மாணவியுடன் உல்லாசம்… கர்ப்பமானதால் இளைஞர் தற்கொலை!!

மாணவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கர்ப்பம் என்றவுடன் போலீசுக்கு பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் பாபு(32). நெல்வியாபாரம் பார்த்து வரும் இவர் 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி, ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இது மாணவியின் வீட்டுக்கு தெரிந்ததால் கண்டித்தார். ஆனால், அதையும் மீறி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.

இதை வீட்டுக்கு சொன்னால் என்ன ஆகும் என நினைத்து மாணவி பூச்சி மருந்து குடித்துமயங்கினார். இதைப் பார்த்த பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என நினைத்து பெற்றோர் கதறினர்.

மகளிர் காவல் நிலைய போலீசில் பாபு மீது புகார் அளித்தனர். இந்த தகவல் எப்படியோ பாபு தெரிந்து கொண்டார். போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பாபு வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Next Post

இரண்டு மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!

Thu Nov 10 , 2022
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே சில மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. […]

You May Like