கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி 12-ம் தேதிகளில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஏற்கனவே எங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.