ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா என்ற 24 வயது பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு குமரன் என்ற 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிய வந்து உறவினர் கோபிநாத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு குழந்தையும் பிறந்தது. அன்றாடம் இரவு கோபிநாத் தாமதமாக வீட்டிற்கு வருவாராம்.
இதனால் சந்தேகம் அடைந்த ரேஷ்மா கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சென்றதும் தனிமையில் இருந்த ரேஷ்மாவுக்கு தனது முன்னாள் காதலன் நினைவு வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் உல்லாசமாகவும் இருந்தனர்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரேஷ்மாவை குமரன் வற்புறுத்தியுள்ளார். ஆனால், எனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கிறது. எனவே, முடியாது என ரேஷ்மா மறுத்துள்ளார். ஆகவே, அவரிடம் ஆத்திரமடைந்த குமரன் அவரை சரமாரியாக தாக்கி தலையில் கல்லை எடுத்து அடித்து துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ரேஷ்மாவை காணவில்லை என்று போலீசில் பெற்றோர் புகார் அளிக்க அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உண்மையை கண்டறிந்த போலிசார் தலைமறைவாக இருந்த குமரனை கைது செய்துள்ளனர்.