சென்னையில் வாகன சோதனையில் இளைஞர்கள் விட்டுச் சென்ற பையை சோதனை செய்தபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 3 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது நிற்கவில்லை. போலீசார் துரத்திச் சென்றபோது பை மட்டும் கிடைத்துள்ளது. அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பினர். அந்த பையை சோதனை செய்தபோது அவர்களில் ஒருவர் நாகூர் மீரான் என்பது தெரியவந்தது.
நாகூர் மீரான் வைத்திருந்த நோட்டுப்புத்தகத்தில் வெடிகுண்டு தயாரிக்கதேவையான குறிப்புகள் இருந்தது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ். பயங்கர வாத அமைப்புகளுடன் தொடர்புடையது என்பதையும் போலீசார் பையை சோதனை செய்து தெரிந்து கொண்டனர்.
இதனால் சென்னையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்குமோ என்ற பீதி எழுந்துள்ளது. இதையடுத்து காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தி நாகூர் மீரானை பிடித்தனர். அவருடைய நண்பர்கள் இரண்டு பேரும் ஜாகீர், நவாஸ் ஆவார். அவர்களிடமும் போலீசார் தீவிரமாக விசாணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் யார்? உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு உள்ளதா? எதற்காக வந்துள்ளார்கள் என்பதுஉள்பட பல தகவல்கள் போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் தெரியவரும் என தகவல்கள் வந்துள்ளன.