கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் மாத்தார் பகுதியைச் சேர்ந்த பிரவின் என்பவர் டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அணக்கரை பகுதி சேர்ந்த 19 வயது ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. மேலும் நெருங்கி பழகி வந்த நிலையில் ஜெஸ்லின் வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு பிரவினிடம் கூறியிருக்கிறார்.
இரு வீட்டாரும் சம்மதிக்கவே இரண்டு வருடத்திற்கு பின் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் நெருக்கம் அதிகரித்து கணவன் மனைவி போல திரிந்து பரிசு பொருட்களை கொடுத்து காதலை உறுதி படுத்தி வந்துள்ளனர்.
இதனிடையே ஜெஸ்லின் மெல்ல மெல்ல விலகிய போது அவரின் மீது சந்தேகம் ஏற்பட்டு கண்காணிக்க தொடங்கினார். அப்போது ஜெஸ்லின் தன்னுடைய பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஜெனித் என்ற நபருடன் பைக்கில் சுற்றி திரிவதை கண்ட பிரவின் அவரை கண்டித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து ஜெஸ்லின் தற்போது ஜெனிதை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரவினிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவின் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பரிசு பொருட்களை திரும்ப தருவதாக கூறி வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு அழைத்து கூலிப்படை கும்பலை அமைத்து பிரவினின் இருசக்கர வாகனத்தில் மோதி சரமாரியாக பிரவினை தாக்கியுள்ளனர்.
அங்கே, ஜெஸ்லின், ஜெனித்துடன் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த பிரவினை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரவின் சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் காதலி ஜெஸ்லின், ஜெனித் மற்றும் தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.