fbpx

PAK vs ENG..!! இரு அணிகளுமே சாம்பியன்..? வெற்றியாளர்களை தீர்மானிப்பது மழை மட்டுமே..!! எப்படி தெரியுமா?

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை இந்த இரு அணிகளும் தலா ஒரு முறை டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்றைய போட்டியின் போது மழைக்கு அதிகபட்சமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

PAK vs ENG..!! இரு அணிகளுமே சாம்பியன்..? வெற்றியாளர்களை தீர்மானிப்பது மழை மட்டுமே..!! எப்படி தெரியுமா?

அவ்வாறு மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், நாளை அதே மைதானத்தில் போட்டியை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியின் நடுவில் மழை பாதிப்பை ஏற்படுத்தினால், போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்படும். அதே சமயம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாடி வரும் பொழுதும் மழை பெய்தால், எங்கு நிறுத்தப்பட்டதோ, அதே இடத்தில் இருந்து நாளைய தினம் போட்டி மீண்டும் தொடங்கப்படும். ஆனால், ஒருவேளை இந்த இரண்டு நாட்களும் மழையால் முற்றிலுமாக போட்டி நடத்தப்படாமல் தடைபட்டால், ஐசிசி விதிமுறைகளின் படி கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

PAK vs ENG..!! இரு அணிகளுமே சாம்பியன்..? வெற்றியாளர்களை தீர்மானிப்பது மழை மட்டுமே..!! எப்படி தெரியுமா?

அதாவது, 2022 டி20 உலகக்கோப்பை சாம்பியன்களாக இரு அணிகளும் கருதப்படுவர். இதுவரை எந்த உலகக்கோப்பையும் இதுபோன்று சமமாக வழங்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவ்வாறு நடைபெறாத வகையில் மழை தான் வெற்றியாளர்கள் யார் என தீர்மானிக்கும் முக்கிய பொறுப்பை பெற்றிருக்கிறது…!

Chella

Next Post

#Alert..!! இடி மின்னலுடன் அச்சுறுத்தும் கனமழை..!! 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! அடுத்த லிஸ்ட் ரெடி..!!

Sun Nov 13 , 2022
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கேரள-தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, […]

You May Like