fbpx

கிடுகிடுவென உயரும் டெங்கு… பள்ளிகளுக்கு புதிய உத்தரவு…

டெங்கு பாதிக்கப்பட்டு அதிகரித்த வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவகாலங்களில் கொசுக்களால் பரவக் கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதன்படி பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவ அதிகாரி நானக் ஷரண் கூறும்போது, “மாவட்டத்தில் டெங்குவை ஆய்வு செய்வதற்காக, பல பகுதிகளில் பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார். டெங்கு பாதிப்புகளை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த சனிக்கிழமை உயர்மட்ட சீராய்வு கூட்டம் நடத்தி, அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு பற்றி மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

லகிம்பூர் கேரி மாவட்டத்தில் டெங்கு பாதித்த 9 நோயாளிகள் மாவட்ட மருத்துவமனையின் டெங்கு வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். கான்பூரில் டெங்கு வார்டில் தினசரி 60 முதல் 70 பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சேருகின்றனர். அவர்களில் டெங்கு உறுதியானவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை 6 பெரியவர்கள் மற்றும் 7 குழந்தைகள் என 13 பேர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து உள்ளனர் என டாக்டர் ஷைலேஷ் குமார் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து, அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் விடுமுறைகளை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Post

பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நோய்…

Mon Nov 14 , 2022
பாலிவுட்டின் பிரபலமான நடிகை ஒருவருக்கு அடிக்கடி வலிப்பு வருவது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இதற்காக அவர் சிகிச்சை பெறுகின்றார் என்பது தெரியவந்துள்ளது. தங்கல் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபாத்திமா சனா. இவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தங்கல் படத்தில் கீதா போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே இப்படி ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது […]

You May Like