பானிபூரியில உப்பு எங்கடா..? பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!! போதை ஆசாமிகள் அட்டகாசம்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர்
பெருந்தொழுவில் 10 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று, திருப்பூரை சேர்ந்த அஸ்வின், பூவலிங்கம், தினேஷ்குமார் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சக்தி கணேஷ் ஆகியோர் சதீஷின் பேக்கரிக்கு மது போதையில் வந்துள்ளனர். அங்கு 4 பேரும் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். பானிபூரியில் உப்பு இல்லை எனக்கூறி பேக்கரி உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், பானிபூரி தட்டை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவர்கள் காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பேக்கரி மீது வீசி உள்ளனர்.

பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில், அங்கிருந்து 4 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக, சதீஷ்குமார் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், இன்று நான்கு பேரையும் அவிநாசி பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவன் மீது 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த திட்டக்குடி பாஜக நிர்வாகி அதிரடி கைது……!

Tue May 2 , 2023
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் விஜயராஜ் (30) பொறியியல் பட்டதாரி ஆன இவர் வேலை தேடி வந்தார். இவர் கடந்த 15/12/2021 அன்றைய தினம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிவேல் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த தீபக் உள்ளிட்டோரை அணுகியுள்ளார். […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like