fbpx

மகேஷ்பாபு அதிர்ச்சி!! ரசிகர்கள் பிரார்த்தனை !! பரபரப்பு !!

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா அவசர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் என்கின்ற அளவுக்கு உயர்ந்துள்ளவர் மகேஷ் பாபு. இவரின் தந்தை மூத்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை 1.15 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை பற்றி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், நடிகர் கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது லேசான மாரடைப்பு இருந்தது. சுவாச கோளாறு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சிபிஆர் சிகிச்சை கொடுத்த பின்னர் உடனடியாக ஐ.சி.யு.வில் அனுமுதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை கொடுக்க துவங்கியுள்ளனர் தற்போது அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 வயதாகும் கிருஷ்ணாவின் உண்மையான பெயர் கட்டமனேனி சிவராம கிருஷ்ண மூர்த்தி என்பதாகும். தெலுங்கு திரை உலகில் பிரபலமான இவர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

கிருஷ்ணாவுக்கு இரண்டு மனைவிகள். ஒருவர் விஜயநிர்மலா, இரண்டாவது மனைவி இந்திரா தேவி. விஜயநிர்மலா 2019ல் காலமானார். கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாவது மனைவி இந்திரா தேவியும் காலமானார். இவர்தான் மகேஷ்பாபுவின் தாயார். எனவே இதுஅவரை பெரிதும் பாதித்தது.

Next Post

மாணவி ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க உத்தரவு…

Mon Nov 14 , 2022
கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு காரணம் பள்ளி நிர்வாகம் எனக்கூறி பெரும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளியை திறக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சாவில் மர்மம் இருப்பதாக ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் புகார் கூறப்பட்டது […]
மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

You May Like