அமெரிக்காவில் சென்று பயில இந்திய மாணவர்களுக்கு அதிக அளவில் வரவேற்பு அளிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீன மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்நாட்டினரில் குறைக்கப்படும் எண்ணிக்கைக்கு ஈடாக இந்திய மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், சேர்க்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீன மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்நாட்டினரில் குறைக்கப்படும் எண்ணிக்கைக்கு ஈடாக இந்திய மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், சேர்க்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து அதிகமான மாணவர்கள் அமெரிக்காவுக்கு படிப்பதற்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
கொரோனா தொற்றுக்குப்பின் அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 2021-22ம் ஆண்டுக்குப்பின் பெரும்பாலன நாடுகளில் இருந்து மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், சீனாவில் மட்டும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021-22ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் சீன மாணவர்கள் எண்ணிக்கை 2.90 லட்சமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரத்துறையிடம் இருந்து புள்ளிவிவரங்களைப் பெற்று “ஓபன் டோர்ஸ் 2022 “ எனும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 2014-15ம் ஆண்டுக்குப்பின் மிகக் குறைவாகும். 2020-21ம் ஆண்டில் சீன மாணவர்கள் எண்ணிக்கை 14.8சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்க கல்லூரிகளில் சேர்ந்து சீன மாணவர்கள் நேரடியாகப் பயில்வதும், பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஆன்-லைன் படிப்புகளில் பயில்வதும் 2021ம் ஆண்டில் குறைந்துவிட்டது. அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில வருவதில் பெரும்பகுதி சீனாவில் இருந்து வருகிறார்கள். மொத்த வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் 30 சதவீதம் சீன மாணவர்கள் உள்ளனர். ஆனால் கொரோனாவுக்குப்பின் சீனாவில் இருந்து மாணவர்கள் வருகை குறைந்து வருகிறது
2வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 21 சதவீதம் இந்திய மாணவர்கள். 2021-22ம் ஆண்டில் இது 19 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-21ம் ஆண்டில் 13 சதவீதம் குறைந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் அமெரிக்காவில் மட்டும் 1.99 லட்சம் இந்திய மாணவர்கள் படித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இருந்து வரும் மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில வருவதைவிட இந்தியாவில் இருந்து மாணவர்கள் செல்வது அதிகரி்த்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தார்போல் ஆஸ்திரேலியாவுக்கு அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி பயிலச் செல்கிறார்கள்.
2022, ஜூன்-ஆகஸ்ட் மாதம் உச்சகட்டமாக இந்தியாவைச் சேர்ந்த 82ஆயிரம் மாணவர்களுக்கு அமெரிக்கா கல்வி விசா வழங்கியது. சீனாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்கியது.
சீனாவில் நிலவும் கொரோனா பரவல், லாக்டவுன், கொரோனா அச்சம் காரணாக சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கல்விக்காகவரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் சீனா மாணவர்களுக்குப் பதிலாக இந்திய மாணவர்களைச் சேர்ப்பது அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவைச் சேர்ந்த 1.10 லட்சம் மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியது, இந்திய மாணவர்களுக்கு 62ஆயிரம் பேருக்குத்தான் விசா வழங்கியது. ஆனால், இந்த முறை சீன மாணவர்களைவிட கூடுதலாக 20ஆயிரம் விசாக்கள் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 40ஆயிரம் விசாக்கள்பற்றாக்குறையாகவே உள்ளன.
அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களைச் சேர்க்க ஆர்வமாக உள்ளனர். அவர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகள்,கட்டணக் குறைப்புகளையும் செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு 9.48 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படித்தனர் இது முந்தைய ஆண்டைவிட 4% அதிகம்.