ஜல்லிக்கட்டு தடை செய்ய கோரிக்க தாக்கல் செய்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக அலங்காநல்லூர் மெரினா கடற்கரை உடைத்த பல இடங்களில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டமாக்கப்பட்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கியது. இதன் பிறகு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரவும் போட்டிகளை நடத்துவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வரும் நிலையில் போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் தான் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு, கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.