fbpx

தற்காலிகப் பணியாளர்களை வைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது மின்சார வாரியம். அவர்கள் பொதுமக்களிடம், ரூ.100 – ரூ.150 என கட்டணம் வசூலிக்கின்றனர். இது சட்டவிரோதமானது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் …

திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாணவிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவிக்கு …

தேர்தலுக்கு 13 மாதங்கள் உள்ளன. அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் நினைத்ததால் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். ஊடகங்கள் உண்மை …

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரூ.4,000 மட்டும் கொடுத்து ஏமாற்றுவதா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் அரசு போகுவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி …

திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பா.ம.க.வினரை கைது செய்வதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி மாவீரன் ஜெ.குருவின் பிறந்தநாள் நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் சிவசங்கர் சென்ற போது, திமுகவின் சமூக அநீதியைக் கண்டித்து முழக்கம் …

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பாடுபடும் இயக்கம் திமுக”நெல்லையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். குறிப்பாக, அண்மையில் …

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிவகாசி அருகே உள்ள சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீசத்தியபிரபு என்ற பட்டாசு ஆலை விருதுநகர் சின்னவாடியூர் அருகே உள்ள தாதப்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் …

கல்விக் கடன் வெறும் ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கல்விக் கடன் ரூ.48.95 கோடி ரத்து என்று அறிவித்துள்ளது திமுக அரசு. ஒவ்வொரு தேர்தலின்போதும், அலங்கார வாக்குறுதியாக, கல்விக் கடன் ரத்து …

தமிழகத்தில் ரூ.10 கோடியில் சாரண இயக்க தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாரத சாரண சாரணியர் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பெருந்திரளணி திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கடந்த ஜன. 28-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றம் நாடுகளைச் சேர்ந்த 20 …

திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்க போராடுபவர்களை கைது செய்வது கண்டனத்துக்குறியது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற தொடர்ந்து ஒரு கும்பல் முயன்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, அங்கு ஆடு பலி …