fbpx

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எதிர்கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. மீண்டும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்து வந்தது. மாதாந்திர ஓய்வூதியம் பொதுவாக கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதி. இந்த ஓய்வூதிய திட்டம் கடந்த 2003ல் டிசம்பர் மாதம்கைவிடப்பட்டது.

2004ம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. புதிய ஓய்வூதிய திட்டப்படி அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதிக்கு செலுத்துவார்கள் அவ்வாறு ஓய்வு பெற்ற பின் ஒரு மறை மொத்தமாக தொகையை பெறுவார்கள். எனவே பழைய ஓய்வூதிய திட்டமே தங்களுக்கான திட்டம் என கூறி அரசு ஊழியர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்றமாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தைத ரத்து செய்துள்ளது. தற்போது பஞ்சாப் அரசும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

மனைவி ஜெயாவை எதை பார்த்து அமிதாப்பச்சன் திருமணம் செய்து கொண்டார் தெரியுமா?

Fri Nov 18 , 2022
இந்தி மொழியில் வெளியாகும் க்ரோர்பதி நிகழ்ச்சியில் அமித்தாபச்சன் மனைவி ஜெயாவுடன் ஏற்பட்ட காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மும்பையில் வசித்து வரும் அமித்தாப் பச்சன் 1969ல் குரல் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் நடிகராக அறிமுகமானார். திரைப்படத்தில் நடித்துக்கொண்டே நடிகை ஜெயபாதுரியை 1973ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஒருபக்கம் ஜெயபாதுரியும் சினிமா துறையில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்தார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து ஜெயபாதுரி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இவர்களுக்கு […]

You May Like