சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து 189 கனஅடியாக சரிந்துள்ளது.
சென்னை புழல் ஏரிக்கு நேற்று காலை 270 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 189 கனஅடியாக சரிந்தது. நீர் இருப்பு 2,624 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல சோழவரம் ஏரிக்கு 10 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர் இருப்பு 417 மில்லியன் கனஅடியாக உள்ளது.
மேலும் கண்ணன்கோட்டை ஏரிக்கு வரும் நீரின் அளவும் சரிந்து. நேற்று 46 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 26 கனஅடியாக சரிவு. ஏரியில் இருந்து 124வது நாளாக 16 கனஅடி நீர் கலங்கல் வழியே உபரிநீராக வெளியேறுகிறது.