fbpx

’உங்கள் பான் கார்டு காலாவதியாகும் தேதி நெருங்கிவிட்டது’..!! உடனே இதை பண்ணுங்க..!!

பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி வாய்ப்பை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளாதவர்களின் பான் கார்டு செல்லாது என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆதார் – பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன்பின்னர் முதல் 3 மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம், அதன்பிறகு அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

’உங்கள் பான் கார்டு காலாவதியாகும் தேதி நெருங்கிவிட்டது’..!! உடனே இதை பண்ணுங்க..!!

இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி வாய்ப்பை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை கூறுகையில், “வருமான வரிச் சட்டம் 1961-ன் படி, பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி 31.3.2023 ஆகும். இது, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும். இல்லையெனில், ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டு செயலிழந்துவிடும். எனவே தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்” என தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பாம்பு கனவும் பரிகார பூஜையும்..!! பூசாரியின் பேச்சை நம்பி நாக்கை பறிகொடுத்த அரசு அதிகாரி..!!

Sat Nov 26 , 2022
ஈரோடு அருகே கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியதால், பரிகாரம் செய்யப் பாம்பிடம் நாக்கை கொடுத்த அரசு அதிகாரியின் நாக்கு பறிபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 54 வயதான அரசு அதிகாரி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியுள்ளது. அரசுப்பணி போக மீதமுள்ள நேரத்தில் இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கனவில் அடிக்கடி பாம்பு தோன்றுவது குறித்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால், இருவரும் […]
பாம்பு கனவும் பரிகார பூஜையும்..!! பூசாரியின் பேச்சை நம்பி நாக்கை பறிகொடுத்த அரசு அதிகாரி..!!

You May Like