fbpx

Fifa World Cup..!! உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் அணி..!! மாஸ் சம்பவம் செய்த பிரான்ஸ்..!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2 சுற்றுகளில் வெற்றி பெற்று முதல் அணியாக பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 2ஆம் பாதி ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் ஒரு கோல் அடித்தார். இதனால் போட்டி சமநிலையை எட்டியது.

Fifa World Cup..!! உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் அணி..!! மாஸ் சம்பவம் செய்த பிரான்ஸ்..!!

எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி பிரிவில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், ரவுண்ட் ஆப் 16 (காலிறுதிக்கு முந்தைய சுற்று) முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும். அதன்படி பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Chella

Next Post

ஜாக்பாட் அறிவிப்பு..!! 10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!! சம்பளம் ரூ.1.12 லட்சம்..!!

Sun Nov 27 , 2022
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் செயல்படும் மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சுற்றுச்சூழல், காடு மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். இதில், தற்போது காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது சம்பளம் Library Information Assistant 1 அதிகபட்சம் 27 வயது ரூ.35,400-1,12,400/- […]

You May Like