fbpx

எட்டு தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு அதிகரிப்பு…! மத்திய அரசு தகவல்…!

முக்கியமான எட்டு தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு 2021 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் (தோராயமாக) 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. உரங்கள், எஃகு, நிலக்கரி, மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி கடந்த ஆண்டு அக்டோபரை விட, இந்த ஆண்டு அக்டோபரில் அதிகரித்துள்ளது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய முக்கியமான எட்டு தொழில்துறைகளின் உற்பத்தியில் தனிப்பட்ட மற்றும் இணைந்த செயல்பாட்டை ஐசிஐ அளவிட்டுள்ளது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள மொத்த பொருட்களில் எட்டு முக்கிய தொழில் துறைகளும் சேர்ந்து 40.27 சதவீதமாக உள்ளது.

2022 ஜூலை மாதத்தில் எட்டு முக்கிய தொழில் துறைகளின் குறியீட்டு இறுதி வளர்ச்சி விகிதம் ஏற்கனவே தோராயமாக இருந்த 4.5 சதவீதம் என்பதில் இருந்து 4.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்- அக்டோபர் காலத்தோடு ஒப்பிடுகையில், 2022-23-ன் இதே காலக்கட்டத்தில் மொத்த வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருந்தது என்று ஐசிஐ கூறியுள்ளது.

Vignesh

Next Post

’பாடம் நடத்தும்போது பலான படம்’..!! ’மெகா ஸ்க்ரீனில் முரட்டு குத்து’..!! தெறித்து ஓடிய மாணவிகள்..!! நாகையில் ஷாக்

Thu Dec 1 , 2022
தனியார் பள்ளியில் பாடம் நடத்தும்போது ஆபாச வீடியோ ஓடிய சம்பவம் நாகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கணினி பாடம் நடத்துவதற்காக ப்ரொஜெக்டர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்தபோது யூடியூப் இணைப்பு மூலமாக […]
’பாடம் நடத்தும்போது பலான படம்’..!! ’மெகா ஸ்க்ரீனில் முரட்டு குத்து’..!! தெறித்து ஓடிய மாணவிகள்..!! நாகையில் ஷாக்

You May Like