சட்டீஸ்கர் மாநில பகுதியில் கோர்பா மாவட்டதில் வசிக்கும் தனு குர்ரே என்பவர் சச்சின் அகர்வால் என்பவரை காதலித்து வந்துள்ளார். சென்ற 21ம் தேதி, தனு குர்ரேவின் செல்போனானது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பல இடங்களில் தேடியும் தனு குர்ரே கிடைக்காததால், பாண்டிரி காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து தனு குர்ரேவை தேடி வந்தனர். அத்துடன் ‘மாயமான தனு குர்ரே – சச்சின் அகர்வால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை, பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் கொடுத்தனர்.
இதனிடையில் பலங்கிர் பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. காவல்துறையினரின் தீவிர விசாரணையில் எரித்துக் கொல்லப்பட்டது தனு குர்ரே தான் என்பது ஊர்ஜிதமாகியது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் , தனது காதலியான தனு குர்ரே, வேறொரு இளைஞருடன் ‘டேட்டிங்’கில் இருப்பது தெரியவந்தது.
இதனால் தனு குர்ரேவிடம் ஆசை வார்த்தை ராய்ப்பூரில் இருந்து சுமார் 200 கி.மீ தூரமுள்ள ஒடிசாவின் பலங்கிர் வரை அவளை அழைத்து சென்று மறைவான இடத்தில் தனு குர்ரேவின் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு எரித்துவிட்டு தப்பியுள்ளான் என கூறியுள்ளனர். இதனையடுத்து சச்சின் அகர்வாலை காவல்துறையினர் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.