திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் பலர் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 10ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.