fbpx

தமிழகம் முழுவதும் 28,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவா…? அமைச்சர் சொல்லிய புதிய தகவல்…!

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46.00 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன. 28,000 சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சத்துணவுத் திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்த ஒரு ஐயமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காகவுமே காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

அத்திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதலமைச்சர் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது மட்டுமில்லாமல் “வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அப்படியிருக்க சத்துணவுத் திட்டத்துறையில் உள்ள சத்துணவு மையங்களை எப்படி அரசு மூட முயற்சி எடுக்கும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், சத்தான உணவை முறையாக மாணவர்களுக்கு வழங்கிடவும் தொடர் கண்காணிப்பை வலுப்படுத்திடவுமே அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நீரை பாதுகாக்க செம்பு பாத்திரத்தை பயன்படுத்தும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை தான்!

Wed Dec 7 , 2022
பழங்காலத்தில் மண்பாண்டங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. அந்த அளவிற்கு மண்பாண்டங்கள், உணவை பாதுகாத்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது நவீன காலம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு உணவை தயாரித்து வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள். பழங்காலத்தில் இருந்த மண்பாண்டங்கள் என்ற பாரம்பரிய முறை முற்றிலுமாக தற்போது மறைந்தே போய்விட்டது. ஆனால் பழங்காலங்களில் இருந்த பழக்க வழக்கங்களை நாகரீகம் என்ற பெயரில் கொஞ்சம், கொஞ்சமாக […]

You May Like