fbpx

’பேருந்துகளில் யாரும் பயணிக்க வேண்டாம்’..!! தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் பரபரப்பு அறிக்கை..!!

மாண்டஸ் புயலானது கரையை கடக்கும்போது, பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி அமைச்சர் சிவசங்கர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘மாண்டஸ் புயல்’ எச்சரிக்கையை அடுத்து பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

’பேருந்துகளில் யாரும் பயணிக்க வேண்டாம்’..!! தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் பரபரப்பு அறிக்கை..!!

குறிப்பாக, மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மேலும், அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள், உயர் அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தொடர்பில் இருந்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மாண்டஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில், பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாண்டஸ் புயல்! தமிழகத்தில் நிறுத்தப்பட்ட புதுச்சேரி பேருந்து போக்குவரத்து!

Fri Dec 9 , 2022
தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக, மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயலின் காரணமாக, ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்கு அவ்வப்போது அமைச்சர்கள் அதிகாரிகள் என்று பலரும் தமிழக முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் சென்ற வருடங்களில் மழை காலங்களில் இருந்த தொந்தரவு எதுவும் தற்போதில்லை என்று சொல்லப்பட்டாலும் கூட, ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கத்தான் செய்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் ஊடகங்கள் கண்டு […]
சென்னை வரும் பேருந்துகள் நிறுத்தம்..!! போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு..!! பயணிகள் கடும் அவதி..!!

You May Like